aswasuma vehicle  BR eBMD

 

நிர்வாகப் பிரிவு

குறிக்கோள் உத்தியோகஸ்தர்களின் பூரண பங்களிப்புடன் அலுவலக கட்டமைப்பை வலுப்படுத்தல்.
பிரதான தொழிற்பாடுகள்
  1.  பலதரப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் வழங்குதல்.
  2. கிராமசேவையாளர் சான்றிதழ்களை உறுதிப்படுத்தல்.
  3. அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்தல்.
  4. வருமானங்களை சேகரித்தல்.

சமூகசேவைப் பிரிவு

குறிக்கோள் வறிய மக்களுக்கும் சமூகத்தில் பின்தங்கியும் கஷ்டத்தில் துன்பப்படும் மக்களுக்கும் நிவாரண உதவிகள் மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகள் வழங்குதல் அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
பிரதான தொழிற்பாடுகள்
  1. நிவாரண, சிறு உபகரண உதவிகள் வழங்குதல்.
  2. வயது முதிர்ந்தோருக்கான விசேட அடையாள அட்டைகள் வழங்குதல்.
  3. உலர் உணவ நிவாரணம் வழங்குதல்.

திட்டமிடல் பிரிவு

குறிக்கோள் சிறப்பான திட்டமிடலின் மூலம் பிரதேச அபிவிருத்தியை முன்னெடுத்தல்.
பிரதான தொழிற்பாடுகள்
  1. அபிவிருத்தி நடவடிக்கைகளை இனங்காணுதல்.
  2. அபிவிருத்தித் திட்டங்கள், அதன் முன்னேற்றம் தொடர்பாக மதிப்பீடு செய்தல்.
  3. மீளப் புதிப்பித்தல் PMCS.
  4. பிரதேச வளங்களை சரியான முறையில் பயன்படுத்துதல்.

கணக்கியல் பிரிவு

குறிக்கோள் நிதி கணக்கியல் பதிவியல் நடவடிக்கை சிறப்பாக மேற்கொள்வதினூடே பிரதேச செயலகத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குதல்.
பிரதான தொழிற்பாடுகள்
  1. வருடத்திற்கான திட்டமிடல் பணிகளை தயாரித்தல்.
  2. சகலவிதமான கொடுப்பனவு முறைகளையும் மேற்கொள்ளல்.
  3. நில அளவை கொடுப்பனவு நடவடிக்கைகளுக்கு துணைபோதல்.
  4. கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  5. கணக்கியல் நிதி அறிக்கைகளை தயாரித்தல்.


பதிவாளர் பிரிவு

குறிக்கோள் பிரதேச பிறப்பு, திருமண, இறப்பு பதிவுகளை ஆவணப்படுத்தலும் தேவை ஏற்படும்பொழுது அவற்றை வழங்குதலும்.
பிரதான தொழிற்பாடுகள்
  1. பிறப்பு, திருமண, இறப்பு பதிவுகளை ஏற்றுக்கொள்ளல்.
  2. பிறப்பு, திருமண, இறப்பு சான்றிதழ்கள் வழங்குதல்.

ஓய்வூதிய பிரிவு

குறிக்கோள் அரசசேவையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய உத்தியோகஸ்தர்களுக்கோ அவர்  சார்ந்த அவரது மனைவிக்கோ, அன்றி அவரைச் சார்ந்து வாழ்பவருக்கோ பிரதேச ரீதியாக சிறப்பான ஓய்வூதியம் வழங்கி அவர்களது நலன்களை பாதுகாத்தல்.
பிரதான தொழிற்பாடுகள்
  1.  மாதாந்த ஓய்வூதியம் வழங்கல்.
  2. விதவை, அநாதை, வலது குறைந்தோருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பாக ஓய்வூதிய திணைக்களத்திற்கு சிபாரிசு செய்தல்.

News & Events

09
செப்2025
Technological Use Among Seniors

Technological Use Among Seniors

On August 29, 2025, the University of...

20
மே2025
Provincial, District, and National Literary Festival - 2025

Provincial, District, and National Literary Festival - 2025

The National Literary Festival, organized annually by...

குடியுரிமை சாசனம்

Scroll To Top